ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-12-05 18:49 GMT

ஆலங்குடியில் அய்யப்பன் கோவிலில் 18-ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதைெயாட்டி அய்யப்பன் சன்னிதானத்தில் உள்ள 18 படிகளும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்