வடக்கன்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி

வடக்கன்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.;

Update: 2023-04-02 19:53 GMT

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் ஆவரைகுளத்தில் பரிசுத்த மாற்கு ஆலயம் மற்றும் தூய சவேரியார் ஆலயம் இணைந்து குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடைபெற்றது.

இந்த பவனியில் எஸ்.ஞானதிரவியம் எம்.பி., குருவானவர் ஜோசுவா கோல்டுவின், வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை நிலவன், சபை ஊழியர்கள் ரெத்தின சிகாமணி, மரியதாஸ், சேகர செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் பால்வண்ணராஜா மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்