குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேக்கரி மஹராஜ் நிறுவனர் சீனு.சின்னப்பாவின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பெருங்கொண்டான் விடுதியில் உள்ள நினைவிடத்தில் அவரது உருவப்படத்திற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் தங்கம் மூர்த்தி, கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.