5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2022-09-10 16:22 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து முதலிபாளையம் சிட்கோ செந்தில் நகரைச்சேர்ந்த அப்புகுட்டி மகன் பாலசுப்பிரமணியம் (வயது 31). ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். திருமணமான இவருக்கும்-மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக செந்தில் நகரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி பாலசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தின் தந்தை அப்புக்குட்டி, திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படை கார்த்திக் (27), நிலக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ்குமார் (24), சிவகங்கை, மானாமதுரை அழகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (36), சிவகங்கை தபால் அலுவலக பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (36), சிவகங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் (34) ஆகியோரை கைது செய்து ஊத்துக்குளி போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இவர்களில் கார்த்திக், பிரகாஷ்குமார், செல்வம், ராஜசேகர், ஜெயராஜ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், கலெக்டர் வினீத்துக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கார்த்திக், பிரகாஷ்குமார், செல்வம், ராஜேசேகர், ஜெயராஜ் ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை சிறையில் இருக்கும் அவர்களிடம் வழங்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்