திருப்பூர் அனுப்பர்பாளையம் வெங்கமேடு ஆத்துப்பாளையம் செல்லும் ரோட்டில் கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக இருந்த சுப்பிரமணியை கொலை செய்த குற்றத்துக்காக திருப்பூர் கோவில்வழி செந்தில்நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சதீஷ்குமார் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள சதீஷ்குமாரிடம், ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.