செங்கம் அருகே 21 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

செங்கம் அருகே 21 அடி உயர முருகன் சிலைக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2022-06-27 05:50 GMT

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பூமலையில் ஸ்ரீபாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீ இடம்புரி விநாயகர் மற்றும் அதன் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 21 அடி பிரம்மாண்ட பூமலை முருகன் சிலைக்கு மகாகும்பாபிஷேக திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக நிகழ்வினை முன்னிட்டு பூமலை அடிவாரம் ஊர்பொதுமக்கள் உள்பட சுற்றுவட்டப் பகுதியில் உள்ள இறையூர், அம்மாபாளையம், பாய்ச்சல், முடியனூர், வாசுதேவன்பட்டு, மேலபுஞ்சை, படிஅக்கரகாரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்வில் மகா கும்பாபிஷேக புனித கலசநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்