தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சை மழவேனிற்காடு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-06-01 17:47 GMT

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்றைய தினம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் நெய்தவாயல் கிராமத்தில் அமைந்துள்ள பிடாரி கவுத்தியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீரை கலசங்களில் ஊற்றினர்.

வேலூர் மாவட்டம் சென்னராயனபள்ளி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சந்தான வேணுகோபாலசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

தஞ்சை மாவட்டம் மழவேனிற்காடு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தஞ்சை திருக்கோடிக்காவல் மஞ்சினி ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த கோவிலில் பொம்மி வீரன், வெள்ளையன், கருப்பன், பிடாரி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்