அடைக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அடைக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;

Update: 2022-11-13 20:56 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

கம்பரசம்பேட்டையில் தலைமை நீர் பணி நிலையம் அருகே அடைக்காயி அம்மன் கோவில் உள்ளது. வரகனேரி அம்பலம் அறுபது தலக்கட்டு உறவுமுறையினர் மூலம் இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 11-ந் தேதி காலை வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து பொதுமக்கள் தங்க கலசத்துடன் தீர்த்த குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து மாலையில் முதல் கால பூஜை நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை நான்காம் கால பூஜையாக விநாயகர் பூஜை, வேத பாராயணம், விசேஷ ஹோமம் நடைபெற்று, பூர்ணாஹோதி முடிந்து கடத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, கோவிலை வலம் வந்து கோபுர விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க 7 கருட பறவைகள் வானில் வட்டமிட்டபோது, வேத விற்பன்னர்கள் கோவில் விமானங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து மூலவர்கள் அடைக்காயி அம்மன், பரிவார தெய்வங்களான விநாயகர், மாசி பெரியண்ண சாமி, ஒண்டி கருப்பண்ணசாமி, காத்தவராயன், மதுரைவீரன் மற்றும் பட்டவர்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு சாற்று முறை தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்