முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிசேக விழா...!

மானாமதுரை அருகே கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது;

Update: 2023-06-02 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 2 கால பூஜைகள் நடைபெற்று நேற்று காலை யாகசாலையிலிருந்து பூஜை செய்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

விழாவில் எஸ். கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி ராக்கு லட்சுமண சுவாமிகள், பாண்டி, போதும்பொண்ணு மற்றும் எஸ்.கரிசல்குளம் சுற்றுவட்டார கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்