அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2023-06-04 18:54 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் பழைய ஏழாயிரம் பண்ைணயில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுபெற்றதையடுத்து கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக முதல் காலயாக பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கன்னி விநாயகர், ஏமாராஜா, சீலைக்காரி அம்மன், வீரபத்திர சாமி, இருளப்பசாமி வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, ராக்கு சக்தி அம்மன், பேச்சியம்மன், மண்டி கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்