அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் உலக மாதா அங்காள ஈஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் உலக மாதா அங்காள ஈஸ்வரி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை, யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், உலகமாதா அங்காள ஈஸ்வரி, இரண வீரப்பசாமி மற்றும் கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. கோபுரத்தின் மேல் உள்ள கலசத்திற்கு ரமேஷ் குருக்கள் தலைமையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தது. பின்னர் சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் கும்பாபிஷேகம்
சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் உலக மாதா அங்காள ஈஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.