ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது;

Update: 2023-06-03 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை ராம்நகர் அழகாபுரி நகர் அழகப்பா ஊருணி பூங்கா மேல்கரை 10-வது வார்டு பகுதியில் உள்ள ஆலமரத்து முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 31-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடம்புறப்பாடு நிகழ்ச்சி பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மறுநாள் ஆலமரத்து முனீஸ்வரர், விநாயகர், பாலமுருகன்,, காளியம்மன், நாகர், முத்தாலம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அழகாபுரி ராம்நகர் விழா குழுவினர் மற்றும் 10-வது வார்டு பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்