அய்யப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
அய்யப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே கம்பாலபட்டி ஊராட்சி குள்ளேகவுண்டனூரில் வித்யசாஸ்தா அய்யப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் சிறப்பு அலங்கார வழிபாடு, தீபாரதனைக்கு பிறகு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஆனைமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.