குமாரபாளையத்தில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2022-12-02 18:45 GMT

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என திடீர் சோதனை நடந்தது. அதில் அங்குள்ள அரசு பள்ளி ரோடு, எடப்பாடி ரோடு மற்றும் சேலம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 45 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் துப்புரவு அலுவலர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்