சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள குமரன் நினைவு மண்டபத்தில் அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மேயர் தினேஷ்குமார் ஆகியோர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து திருப்பூர் குமரன் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.