கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் எம்.எஸ்.எஸ்.சி குழுமம் நடத்திய பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் முதல் பரிசை வென்றனர். அதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கபடி போட்டியில் 2-வது இடத்தையும் பிடித்து பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அதிகாரி அழகர்சாமி, முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.