கலை விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
கலை விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.;
சுரண்டை:
பள்ளிக் குழந்தைகளுக்கான மிர்ச்சி கிட்டி குழந்தைகள் கலை விழா கடந்த வாரம் மதுரையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 119 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து 25 மாணவா்கள் கலந்து கொண்டனா். குழு நடனத்தில் மாணவா்கள் சி.டமோக்னஸ் ராஜேந்திரா, சுதிப்ராம், பாா்த்திவ் தருண், லீனா ஹாசினி, சாதனா ஹாிணி, மனிஷா, மகாசக்தி, ஹிவஸ்திகா ஆகியோா் முதல் பாிசை பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாரிக்கனி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.