மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு
திறனாய்வு தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு
வேதாரண்யம்:
8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வாரியான திறனாய்வுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் சீதாலெட்சுமி உயர்நிலைப்பள்ளி மாணவர் விஸ்வபாலா மாவட்டத்தில் முதலிடமும், ஆகாஷ் 2-ம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்விலும் இப்பள்ளியை சேர்ந்த 7 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் செயலர் கிரிதரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பப்பிதாபானு, சீதாலெட்சுமி உதவி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாநிதி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.