முதலீடுகளை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டுகள் - அண்ணாமலை பேட்டி
முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை ,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது . முதலீட்டில் தமிழக அரசு இன்னும் அதிக இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக இருந்திருக்க வேண்டும். குஜராத் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது
அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. ரூ.6.6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்த தமிழக அரசை பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.