மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 40 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 40 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டப்பட்டனர்.

Update: 2022-11-28 20:22 GMT

துறையூரில் உள்ள செழியன் கராத்தே இன்டர்நேஷனல் மாணவர்கள், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கராத்தே இந்தியா ஆர்கனைசேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர். திருச்சி மாவட்ட கராத்தே அசோசியேசன் தலைவர் கியோசி இளஞ்செழியன் தலைமையில் நடந்த இந்த போட்டியில் சப்-ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் மாவட்ட அளவில் 400 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் துறையூரில் இருந்து பங்கேற்ற மாணவர்கள் வெற்றி பெற்று 16 தங்கம், 9 வெள்ளி, 15 வெண்கலம் என ெமாத்தம் 40 பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர். இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவர்களையும், கிளை பயிற்சியாளர்களையும் தலைமை பயிற்சியாளரும், செழியன் கராத்தே இன்டர்நேஷனல் தலைவருமான ரென்சிகிருஷ்ணமூர்த்தி பாராட்டி, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்து நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் கராத்தே துணை பயிற்சியாளர் விவேகானந்தன், மாணவர்களை வாழ்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்