மாணவர்களுக்கு பாராட்டு

நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2022-11-10 18:45 GMT

நத்தம் என்.பி.ஆர்.பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் பங்கேற்றனர். இதில் கழிவுநீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களுக்கு பதிலாக 3டி பிரிண்டிங் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட் வடிவமைத்து காட்சி படுத்தினர்.போட்டியில் இந்த படைப்பு 2-வது இடம் பிடித்தது இதனையடுத்து மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரிசு பெற்ற கல்லூரியின் எந்திரவியல்துறை இறுதியாண்டு மாணவர்கள் ராகேஷ், இமான்முகமது, கௌதமன், சரவணக்குமார் ஆகியோருக்கு என்.பி.ஆர்.கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.




Tags:    

மேலும் செய்திகள்