இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவிக்கு பாராட்டு

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவிக்கு பாராட்டு;

Update: 2023-02-11 18:45 GMT

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு கணினிப்பொறியியல் பயின்று வரும் மாணவி அருண்பிரியா அண்ணா பல்கலைக்கழக கராத்தே அணியில் தேர்வாகி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அடல் பிகாரி வாஜ்பாய் விஷ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டியில் கலந்துகொண்டார். இந்த போட்டியில் பங்குபெற்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மாணவி அருண்பிரியாவை கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள், கல்லூரி செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன், நிர்வாக தலைவர் மணிகண்டகுமாரன், கல்வி சார் இயக்குனர் மோகன், முதல்வர் ராமபாலன், உடற்கல்வி இயக்குனர் வேலவன், பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் மற்றும் துறைத்தலைவர்கள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்