தீயணைப்பு வீரருக்கு பாராட்டு
முதல்-அமைச்சர் கோப்பைக்கான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு விழா நடந்தது.;
தூத்துக்குடியில் நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டியில் திருச்செந்தூர் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் வீரர்கள் விநாயகமூர்த்தி, சுதாகர் மற்றும் கரோல் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் குண்டு எறிதல் போட்டியில் கரோல் ஜோசப் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார். அவரை மாவட்ட அலுவலர் குமார் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். உதவி மாவட்ட அலுவலர் ராஜூ மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி மற்றும் பணியாளர்கள் அவரை பாராட்டினர்.