சட்டைநாதர் கோவிலில் குடமுழுக்கு திருப்பணி

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு திருப்பணியை தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-05-06 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு திருப்பணியை தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

24-ந்தேதி குடமுழுக்கு

சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகியுடன் பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். மேலும் கோவிலில் திருஞானசம்பந்தர் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை, கருங்கல் தரைதளம், சிற்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பணிகளை ஆதீனம் ஆய்வு

இந்த திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, செயலாளர் கோவி நடராஜன், முரளிதரன், பாலசுப்பிரமணியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, பொறியாளர் தனராஜ், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் தருமபுரம் மாதிரம் சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்