கூடலூர் ரைசிங் ஸ்டார்ஸ் அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் போட்டியில் கூடலூர் ரைசிங் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.;

Update: 2023-09-30 22:00 GMT

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏ டிவிஷன் லீக் போட்டியில் கூடலூரை சேர்ந்த ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி மற்றும் கூடலூர் கிரிக்கெட் அணி பங்கேற்று விளையாடின.

இந்த போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 31.2 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் ஜூபின் 51 ரன்கள், வைசாக் 37 ரன்கள் மற்றும் விஜயன் 33 ரன்கள் எடுத்தனர். கூடலூர் கிரிக்கெட் அணி பந்து வீச்சாளர் சபிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 35 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கூடலூர் அணி 25.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

இந்த அணி வீரர் ஜெயசூர்யா அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். கூடலூர் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் புனித் 7 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி, 26 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 120 ரன்கள் வித்தியாசத்தில் கூடலூர் ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்