கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்சித்த மருத்துவப்பிரிவு பொன்விழா

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு பொன்விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-10-17 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூட்ட அரங்கில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பொன்விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிலைய மருத்துவ அலுவலர் சுதா முன்னிலை வகித்தார். சித்தர் வணக்கம் பாடலுடன் தொடங்கிய விழாவில் மருத்துவர் அபிநயா வரவேற்று பேசினார். ஓய்வுபெற்ற சித்த மருத்துவர்கள் லட்சுமையா, முத்து மந்திரம், குருசாமி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, அங்கன்வாடி பணியாளர்களுக்கு சமையல் போட்டி நடத்தப்பட்டு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் சித்த மருத்துவ விழிப்புணர்வு கையேடு, மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சித்த மருத்துவர்கள் சேவியர், தமிழமுதன், பீனா, விஜய லதா, செல்வகுமார், மகேஸ்வரி, முருகப்பொற்ச்செல்வி, கார்த்திகா, அனுஷா, திருமுருகன், ஜான் மோசஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருந்தாளுனர் முத்துலட்சுமி நன்றி கூறினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டை மருத்துவர் அபிநயா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்