கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

Update: 2023-10-10 16:01 GMT

கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

திருப்பூர் எம்.எஸ்.நகர் செல்வராஜ் நகர் முதல் வீதியில் செல்வவிநாயகர், நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி அன்பரசன் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது விநாயகர் கோவில் மற்றும் நாகாத்தம்மன் கோவில் முன்புறம் இருந்த உண்டியல்கள் உடைந்து கிடந்தன. உள்ளே இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். சமீபத்தில் தான் உண்டியல் பணம் எண்ணப்பட்டதாகவும், இதனால் ரூ.1,000-த்துக்குள் திருட்டு போனதாக தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்