கோவில் காளைக்கு மரியாதை

கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.;

Update:2022-05-21 00:52 IST

மதுரை, 

மதுரை திடீர்நகர் தேவி கருமாரியம்மன் கோவில் காளை மருது என்ற ஜல்லிக்கட்டு காளை, அலங்காநல்லூர் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு காளை நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது. இதையடுத்து அந்தபகுதி மக்கள், கோவில் நிர்வாகிகள் அந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் காளையை ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்