கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் திருவிழா பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம்

கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் திருவிழா பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம்;

Update:2023-05-19 02:56 IST

கடத்தூர்

கோபி கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 10-ந் தேதி கம்பம் நடப்பட்டது. 15-ந் தேதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 16-ந் தேதி 108 விளக்கு பூஜையும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று முன்தினம் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மலர் பல்லக்கில் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று பெண்கள் மாவிளக்கு, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அக்னிக் கும்பம் எடுத்து வருதலும், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று இரவு கம்பம் பிடுங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. அதன்பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிக்கிறார். நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீர் உற்சவம், ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. மேலும் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் புது மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்