பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள்
பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள்;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று முன்தினம் நடந்தது. பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 மணியளவில் பண்ணாரி அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தார்கள். இரவு 10 மணி அளவில் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்தது.