கொடுமுடி மலையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கொடுமுடி மலையம்மன் கோவில் கும்பாபிஷேகம்;
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான மலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 2-ந் தேதி அன்று கிராம சாந்தியுடன் தொடங்கியது. 3-ந் தேதி அன்று முதல் கால பூஜையும், நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால பூஜையும், நேற்று 4-ம் கால பூஜையும் நடந்தது. அதன்பின்னர் கடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 10 மணி அளவில் மூலவர் மலையம்மன் விமான கலசங்களுக்கும், ராஜகோபுரத்துக்கும் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசத்துக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தினை கொடுமுடி ஆதீனம் தண்டபாணி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாலை மலையம்மன் திருவீதி உலா நடைபெற்றது.