பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.62¾ லட்சம் உண்டியல் காணிக்கை
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.62¾ லட்சம் உண்டியல் காணிக்கை
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் மாதம்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பண்ணாரி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 20 உண்யடில்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.
இந்த பணி கோவில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் துணை ஆணையர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், சேவை சங்கத்தார் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர். உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் ரூ.62 லட்சத்து 82 ஆயிரத்து 283- ஐ செலுத்தி இருந்தனர். மேலும் 380 கிராம் தங்கம், 4 ஆயிரத்து 633 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.