நஞ்சை கொளாநல்லி காவிரி ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு
நஞ்சை கொளாநல்லி காவிரி ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே நஞ்சை கொளாநல்லி கருங்கரட்டில் பிரசித்தி பெற்ற செல்வ கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தர்ம சாஸ்தா அய்யப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அய்யப்பன் சாமி கொளாநல்லி காவிரி ஆற்றுக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆற்றை சென்றடைந்ததும் அய்யப்பனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராட்டு வைபவம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் அய்யப்பன் எழுந்தருளினார். இதையடுத்து சாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் செல்ல கணபதி மற்றும் அய்யப்பன் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்ததர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் காலை மகா கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகமும், இரவில் குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.