முறையூர்,
சிங்கம்புணரி அருகே உள்ள முறையூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் மீனாட்சி மற்றும் சொக்கநாதருக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 3-வது வாரம் திங்கட்கிழமை சோமவாரத்தில் உலக நன்மை வேண்டியும், கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழவும் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. கோவில் குருக்கள் சுரேஷ் தலைமையில் கங்கா தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்ய 1008 சங்குகளை கொண்டு திருவாச்சி மத்தியில் சிவலிங்கம் தோற்றம் அமைத்து 1008 சங்குகள் அமைக்கப்பட்டன. சங்குகளில் கங்கா தீர்த்தம் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 1008 சங்குகளில் உள்ள புனித நீரை கொண்டு மூலவர் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் சங்காபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராமத்தினர் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.