சென்னிமலை நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
சென்னிமலை நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
சென்னிமலை
சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் ஆதித்யா நகரில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு சாமிக்கு பால், தயிர், மஞ்சள் உள்பட 21 வகையான திரவியங்களால் அன்னாபிஷேக விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நர்மதை மருந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சென்னிமலை சிவஞான சித்தர்கள் பீடத்தின் நிறுவன தலைவர் சரவணானந்த சரஸ்வதி சாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.