சென்னிமலையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி

சென்னிமலையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி;

Update: 2022-09-05 21:36 GMT

சென்னிமலை

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் சென்னிமலை பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது. அந்த வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாமி அம்மாள் மற்றும் வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சகடை தேரில் எழுந்தருளினார்.

சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவாச்சாரியார் மற்றும் மதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்