பஞ்சமுக அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் வீதி உலா

அனுமன் ஜெயந்தியையொட்டி பஞ்சமுக அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் வீதி உலா நடந்தது.;

Update: 2022-12-22 18:45 GMT

வடுவூர்:

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கருடன், நரசிம்மர், அனுமன், வராகர், ஹயகீரிவர் ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் வில்லேந்திய கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதை தொடர்ந்து பஞ்சமுக அனுமன் மற்றும் கோதண்டராமருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது ..பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்