சாத்தூர்
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கல்யாணராஜ் (வயது 58). கொத்தனார். இவர் வேலை முடிந்து, சைக்கிளில் சாத்தூரில் இருந்து ஓ.மேட்டுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஓ.மேட்டுப்பட்டி சாலையில் தீப்பெட்டி ஆலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கல்யாணராஜ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கல்யாணராஜ் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் கல்யாணராஜ் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் அழகர்சாமி மீது சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.