கோத்தகிரி அரசு பள்ளியில் கலைத்திருவிழா

கோத்தகிரி அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.

Update: 2023-10-19 21:00 GMT

தமிழ்நாட்டில் பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக பள்ளி கல்வித்துறை செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை அரசு பள்ளிகளில் நடத்த பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது. நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் படி, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கோத்தகிரி வட்டாரத்தில் 60 அரசு பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 500 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று முன்தினம் கலை, இலக்கியம், ஓவியம், மணல் ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. நேற்று தனி நபர் நடனம், குழு நடன போட்டிகள் நடந்தது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இன்றுடன் (வெள்ளிக்கிழமை) 3 நாட்கள் நடைபெற்று வந்த கலைத்திருவிழா போட்டிகள் நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்