ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Update: 2023-06-20 22:15 GMT

ஆனைமலை

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இதில் ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 86 விவசாயிகள் 690 மூட்டை கொப்பரையை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 340 மூட்டைகள் முதல் ரகமாகவும், 350 மூட்டைகள் 2-வது ரகமாகவும் தரம் பிரிக்கப்பட்டது.

பொதுஏலத்தில் தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.66 முதல் ரூ.76 வரை ஏலம் விடப்பட்டது. 2-வது ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ.46 முதல் ரூ.66 வரை ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 215 மூட்டைகள் வரத்து அதிகரித்தது. இதனால் கொப்பரை விலை கிலோவுக்கு கடந்த வாரத்தை விட ரூ.2 குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்தனர்.

இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்