ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 75 விவசாயிகள் 509 மூட்டை கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தை சேர்ந்த 5 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 240 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 79 ரூபாய் முதல் 83 ரூபாய் 10 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. 269 மூட்டை இரண்டாம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 61 ரூபாய் 20 காசுகள் முதல் 77 ரூபாய் 10 காசுகள் வரை ஏலம் விடப்பட்டது. கடந்த வார விலையை விட 50 காசுகள் விலை அதிகரித்து இருந்தது என ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தெரிவித்தார்.