கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க முப்பெரும் விழா
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.
கரூர் திருவிகா சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா, கல்வி ஊக்க பரிசு வழங்கும் விழா, வேட்டுவ வரலாற்று காவலர் விருது மற்றும் வேட்டுவத்தின் நம்பிக்கையாளர் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாநில தலைவர் வேங்கலன் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் செல்வம் என்கிற ராமமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனர் வாழவந்தி நாடு சரவணன் கலந்து கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 23 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்களும், 350 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசும் வழங்கி பேசினார்.
இதில் கீதா வேலாயுதசாமி, அம்மன் ஆர்ட்ஸ் கல்லூரி ஜெயலட்சுமி, டாக்டர் பரமேஸ்வரன், வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.