கோமளாம்பிகை கோவில் தீமிதி திருவிழா

சீர்காழி கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-03-10 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி கோமளாம்பிகை கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

சீர்காழி கீழவீதியில் கோமளாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தஆண்டு தீமிதி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் வீதிஉலா நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் நேற்று மேளதாளங்கள் முழங்க பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து வந்தனர். தேர் தெற்கு வீதி, தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.

சிறப்பு அலங்காரம்

அதையடுத்து மதியம் அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மன் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதற்கான பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில், ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முனீஸ்வரர் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்