விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொலு

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் கொலு வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-01 16:47 GMT

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி சென்று வழிபாடு செய்தனர்.

அதேபோல் இளைஞர்கள் குழுவினர் 3 முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான அரவிந்தன் என்பவர் அவரது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன, சின்ன விநாயகர் சிலைகள் மற்றும் பொம்மைகளை வைத்து கொலு வைத்து உள்ளார்.

இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

விநாயகர் சீட்டு விளையாடுவது போன்றும், பரமபதம் விளையாடுவது போன்றும் சிலைகள் வைத்திருந்தது காண்போரை கவரும் வகையில் இருந்தது.

மேலும் இதில் தங்கம், வெள்ளி போன்றவற்றில் செய்யப்பட்ட விநாயகர் சிற்பங்களும், நவீன வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு விதங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அரவிந்தனிடம் கேட்ட போது, சிறு வயதில் இருந்தே விநாயகர் மீது கொண்ட ஈடுபாடு காரணத்தினால் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை சேகரித்து வருகிறேன்

. வருடந்தோறும் விநாயகர் சிலைகளை வைத்து கொலு வைப்பது வழக்கம். 25-வது ஆண்டாக இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை வைத்து கொலு வைத்து உள்ளேன். இந்த கொலு வருகிற 7-ந் தேதி வரை இருக்கும் என்றார்.

-

Tags:    

மேலும் செய்திகள்