கோடியக்காடு முருகன் கோவில் தீர்த்தவாரி
கோடியக்காடு முருகன் கோவில் தீர்த்தவாரி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கோடியக்காடு குழகர் (முருகன்) கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.பவுர்ணமியையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுடன் முருகபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதையடுத்து சன்னதி அமிர்த புஷ்கரணியில் தீர்த்தவாரியும், விடையாற்றி விழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.