கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம்
பேரளம் அருகே கிருபாசமுத்திர பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.;
நன்னிலம்:
பேரளம் அருகே சிறுபுளியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோவில் உள்ளது. இந்த ேகாவில் தேர் சிதிலமடைந்ததால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் புதிதாக தேர் செய்யப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில்கிருபா சமுத்திர பெருமாள் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தது.