மழலையர் பட்டமளிப்பு விழா
காரைக்குடியில் டாக்டர் அழகப்பா அகாடமி பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடியில் டாக்டர் அழகப்பா அகாடமி பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவக்குமார் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். அழகப்பா கல்வி குழும நிறுவனங்களின் தலைவர்கள், பள்ளி முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.