வரத்து அதிகரிப்பால்தர்மபுரி உழவர் சந்தையில் கருணைக்கிழங்கு விலை குறைந்தது

Update: 2023-09-03 19:00 GMT

தர்மபுரி உழவர் சந்தையில் கருணைகிழங்கு வரத்து அதிகரிப்பு காரணமாக அதன் விலை குறைந்தது.

கருணைகிழங்கு

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கருணைக் கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் பி, சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றவும், எலும்புகளை பலப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிலோவிற்கு ரூ.6 குறைந்தது

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளுக்கு கருணைக்கிழங்கு வரத்தில் பெரும்பாலான காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இதன் காரணமாக இதன் விலை பெரிய ஏற்ற இறக்கங்கள் இன்றி இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.74-க்கு விற்பனையான கருணைக்கிழங்கு நேற்று கிலோவிற்கு ரூ.6 விலை குறைந்தது. 1 கிலோ ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.75 முதல் ரூ.80 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு கருணைக்கிழங்கு வரத்து அதிகரித்த நிலையில் விலை சற்று குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்