பள்ளி மாணவி கடத்தல்
கண்டாச்சிபுரம் அருகே பள்ளி மாணவி கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு;
விழுப்புரம்
கண்டாச்சிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உறவினர்கள், தோழிகளின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவியை காணவில்லை. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.