பிளஸ்-2 மாணவி கடத்தல்

பிளஸ்-2 மாணவியை கடத்திய 2 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-10-08 18:15 GMT

ஆற்காடு அடுத்த லாடவரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் மேற்கொண்ட விசாரணையில் மோசூர் பாளையம் பகுதியை சேர்ந்த ருத்ரேஷ் (வயது 19), மணிகண்டன் (30) ஆகிய இருவரும் ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்